பாஜக மூத்த அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். பாஜக தேசிய தலைவர் நட்டா, அமைச்சர்கள் பியூஸ் கோயல், சிவராஜ் சிங் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அம்பேத்கர் குறித்து அமித்ஷாவின் சர்ச்சை பேச்சு குறித்தும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும், எதிர்க்கட்சி எம்பிகள் இடையே நடந்த தள்ளுமுள்ளு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.