பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ராணுவ முகாம்களை குறி வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் பயங்கரவாதிகள் சிலர் டேங்க் பகுதியில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து ராணுவத்தினர் அப்பகுதிக்கு சென்று துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.

இதில் பயங்கரவாத கமாண்டர் குல் யூசப் கொல்லப்பட்டார். ராணுவத்தினரால் தேடப்பட்டு வந்த இவர் தொடர்பான தகவலை கொடுத்தால் ஏழரை லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.