கேரளா மாநிலத்தில் உள்ள கல்லூரி அதன் அலெக்ஸ்(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்க்கிறார். இவருக்கும் கோழி கோட்டை சேர்ந்த பள்ளி மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அவர் அடிக்கடி பள்ளி மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பியுள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்த விஷயத்தை கூறியுள்ளார். அவர்கள் அலெக்சை கையும் களவுமாக பிடிக்க நினைத்தனர். அதன்படி மாணவி அலெக்சிடம் நைசாக பேசி கோழிக்கோட்டுக்கு அழைத்துள்ளார்.

இதனைக் கேட்ட அலெக்ஸ் மாணவியுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசையில் அவர் சொன்ன இடத்திற்கு காரில் வந்தார். இதனையடுத்து மாணவியை காரில் ஏற்றி செல்ல முயன்ற போது மறைந்திருந்த மாணவியின் உறவினர்கள் அலெக்சை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அலெக்ஸை கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.