நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி 17 வருடங்களுக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் கோப்பையை வென்ற பிறகு பார்படாசில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இந்திய வீரர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று அவர்கள் அங்கிருந்து தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு புறப்பட்டனர்.

இந்த விமானம் இன்று காலை டெல்லியை வந்தடைந்த நிலையில் விமான நிலையத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உலக கோப்பையை கொடுத்து வாழ்த்து பெற்றனர். மேலும் இன்று மும்பையில் திறந்த வெளி பேருந்தில் உலகக்கோப்பையுடன் இந்திய வீரர்கள் பேரணியாக வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.