இத்தாலியில் ‌ உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் U-10 ரேபிட் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சர்வானிகா என்ற சிறுமி தங்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டி மொத்தம் 11 சுற்றுகளை கொண்டது. இதில் ரேப்பிட் பிரிவில் 9 புள்ளிகளுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த சர்வானிகா தங்கம் என்று சாதித்துள்ளார். இதேபோன்று பிளிட்ஸ் பிரிவில் இவர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

இதேபோன்று இத்தாலியில் நடைபெற்ற இந்த கேடட் செஸ் போட்டியில் 8 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மொத்தம் 123 பேர் விளையாடினர். இதில் இந்தியாவின் அதாவது ஹைதராபாத்தை சேர்ந்த திவித் ரெட்டி அதுல்லா (6) , சாத்விக் ஸ்வைன், சீனாவைச் சேர்ந்த குவா ஜிமிங் ஆகிய 3 வீரர்கள் தலா 10 புள்ளிகள் பெற்ற நிலையில், டை பிருக்கர் ஸ்கோரில் திவித் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். சாத்விக் இரண்டாம் இடம் பிடித்தார். மேலும் இதேபோன்று 12 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இந்திய வீரர் ஆன்ஸ் நந்தன் நான்காம் இடத்தை பிடித்துள்ளார்.