
இந்திய அணியின் முன்னாள் வேகம் வந்து வீச்சாளரான ஜகீர் கான் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒரு நாள் பார்மெட்டில் சிறந்த 5 வேகம் பந்து வீச்சாளர்கள் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ஒரு இந்திய பௌலர்களையும் தேர்வு செய்யவில்லை. இரண்டு பாகிஸ்தான் பௌலர்களை மட்டுமே கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமான சிறந்த வேகம் வந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதில் முக்கியமான ஒருவர் வாசிம் அக்ரம். துல்லியமான யார்க்கர்களை வீசக்கூடியவர்.
ஓவர் தி விக்கேட் மற்றும் அரௌண்ட் விக்கெட்டில் அபாரமாக பந்து வீசக்கூடிய திறமை கொண்டவர். ஒருநாள் பார்மெட்டில் மிகச்சிறந்த பௌலராகவும் அவர் இருக்கின்றார். இரண்டாவது இடம் கிளென் மெக்ரா தான். எக்ஸ்ட்ரா பவுன்ஸ் மூலமாக மிரட்டக் கூடியவர். புதிய பந்தில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளார். இவர்களைத் தொடர்ந்து வகார் யூனிஸ், டேல் ஸ்டேனுக்கு அடுத்தடுத்த இடங்களை கொடுக்கலாம். இவர்கள் இருவருமே ஒவ்வொரு பந்தையும் அபாரமாக வீசி பேட்டர்களுக்கு பெரிய அளவில் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்று தெரிவித்துள்ளார்.