உலகிலேயே விலை உயர்ந்த வண்டு குப்பையில் வாழ்கிறது. ஆனால் அதன் விலை அவ்வளவு அதிகம். பூமியில் பல விலங்குகள் மற்றும் பூச்சிகள் உள்ள நிலையில் சிலவற்றை உணவாக சாப்பிடுகிறோம். ஆனால் ஒரு பூச்சி தான் உலகிலேயே விலை உயர்ந்தது. குப்பையில் வசிக்கும் இந்த வண்டை ஜப்பான் நாட்டு வளப்பாளர் இளநகை பண மதிப்பில் கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து உள்ளார்.

இந்த விலை உயர்ந்த வண்டுக்கு stag beetle என்று பெயர். லுகானிடே குடும்பத்தை சேர்ந்த இந்த பூச்சிகள் உலகம் முழுவதும் 1200 இனங்கள் உள்ளது. இந்த வண்டுகள் அழுகும் மரத்தை விரும்பி சாப்பிடும். இந்த பூச்சி பழச்சாறு மற்றும் மர சாறுகளை சாப்பிட்டு சுமார் ஏழு ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது. இந்த வண்டுகளின் தலையில் ஐந்து அங்குள்ள நீளமான கருப்பு கொம்புகள் இருக்கும். அவை அதிக வெப்பம் உள்ள பகுதிகளில் சுற்றித் திரிகின்றன. இந்த வண்டு ஆபத்தான நோய்களுக்கு மருந்து தயாரிக்க பயன்படுகிறது. இதனால்தான் இவ்வளவு மதிப்புடையதாக உள்ளது. ஆனால் தற்போது இந்த இனம் அழியும் தருவாயில் உள்ளது.