பொதுவாகவே காபி மற்றும் டீ குடிக்காதவர்களின் எண்ணிக்கை உலக அளவில் மிக குறைவு தான். காபியை பொருத்தவரை டீத்தூளுடன் ஒப்பிடும்போது சற்று விலை அதிகமாக இருக்கும். இதனால் அதிகமானோர் டீ குடிப்பதை தேர்வு செய்கிறார்கள். உலக அளவில் பெரும்பாலானோர் விரும்பும் பானமாக டீ உள்ளது. ஆனால் உலகில் விலை உயர்ந்த டீ எது? அதில் அப்படி என்ன இருக்கிறது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த டீயாக டா ஹோங் போ எனப்படும் சீன நாட்டில் பயிரிடப்படும் ஒருவகை தேயிலையாகும். இவை உலக அளவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த டீ ஒரு கிலோ 10 கோடி ரூபாய்க்கு விற்பனையாகிறது. சீனாவின் புஜைன் அருகே உள்ள உய்சான் என்ற பகுதியில் இந்த தேயிலை பயிரிடப்படுகின்றது.

இதில் உயிரை காக்கும் தன்மை கொண்ட எப்பதால் இருப்பதால் இதை உயிர் கொடுக்கும் தேயிலை என்று அந்த நாட்டில் அழைக்கின்றனர். இந்த டீயை அருந்துபவர்களுக்கு பல்வேறு விதமான வியாதிகள் குணமாகிறது. இவை குறைந்த அளவில் பயிரிடப்படுவதால் உலகில் மிகவும் அரிதான பொருளாக பார்க்கப்படுகிறது. இந்த வகை தேயிலை சில கிராம்களை பல லட்சம் கொடுத்து வாங்குபவர்கள் உள்ளனர். சீன அரசாங்கத்தை பொருத்தவரை இது பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது.