
நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் கிளன் பிலிப்ஸ் அசத்தலான பீல்டிங்க் செய்து ரசிகர்களை ஈர்க்க கூடியவர். கிரிக்கெட் தொடரில் அவர் பறந்து பிடிக்கும் கேட்ச் இணையத்தில் வைரலாவது வழக்கம். சமீபத்தில் முடிவடைந்த சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரிலும் பில்டிங் காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாட உள்ள இவர் உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன் என்று கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “விமானியாக வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய கனவு. என்னுடைய இளமை பருவத்தில் நான் கிரிக்கெட் விளையாடாமல் உலகில் உள்ள மொத்த பணமும் என்னிடம் அப்போது இருந்திருந்தால் அன்று விமானியாக மாறியிருப்பேன். காற்றில் பறக்க வேண்டும் என்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஏன் இந்த அளவுக்கு வானில் பறக்க பிடிக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகு மலைகளுக்கு சென்று எனக்கு பிடித்தமானவற்றை செய்வேன். முதலாவது விமானத்தை இயக்குவதாக தான் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
GP playing flight simulator 👉 well, that just makes sense 🤷🏻
𝘊𝘢𝘵𝘤𝘩 the entire video, only on Titans FAM App: https://t.co/A6c8oDJe0N 📲 pic.twitter.com/JaKEC7V3me
— Gujarat Titans (@gujarat_titans) March 23, 2025