உத்தர் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் உறவினர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். பல நாட்களாக பொறுத்துக் கொண்ட அந்த பெண் ஒரு கட்டத்தில் தனது குடும்பத்தினரிடம் நடந்த கொடுமையை கூறியுள்ளார். ஆனால் இந்த விஷயத்தில் குடும்பத்தினர் அந்த பெண்ணிற்கு ஆதரவாக நிற்கவில்லை.

அந்த பெண்ணிற்கு மொட்டை அடித்து கை கால்களை கட்டி போட்டு கொடுமையாக தாக்கியுள்ளனர். இதனை வேடிக்கை பார்த்தவர்கள் காணொளியாக பதிவு செய்த சமூக வலைதளத்தில் வெளியிட்டனரே தவிர யாரும் அந்தப் பெண்ணுக்கு உதவ முன் வரவில்லை. வீடியோ வைரலான நிலையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.