ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக் நிறுவனத்தில் சேர்வதற்காக  1998 ஆம் வருடம் மத்திய தொழில்துறை பாதுகாப்பு துறையில்  பணிபுரிந்த ஒரு பாதுகாப்பு அதிகாரி தன்னுடைய கடந்த கால சேவைக்கான ஓய்வுதியம்  குறித்த வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் பதிவு செய்தா.ர் இந்த வழக்கு விசாரணையில் ஓய்வூதிய  விதிகளின் அடிப்படையில் உரிய அனுமதி இல்லாமல் மற்றொரு அரசு பணிக்காக தற்போதைய பணியில் இருந்து ராஜினாமா செய்தால் முந்தைய பணியின் ஓய்வூதிய பலன்களை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை மேற்கோள் காட்டிய உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த விசாரணையில் ஓய்வூதியம் தொடர்புடைய விதிகள் பரிசீலனை செய்யப்பட்டு மற்றொரு அரசு பணிக்காக அரசு பணியில் இருந்து அங்கீகரிக்கப்படாமல் ராஜினாமா செய்தால் கடந்த கால சேவை மற்றும் ஓய்வூதிய பலன்கள் கிடைக்காது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.