காமெடி நடிகராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்து சூரி கதாநாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். தனக்கு ஏற்ற கதைகளையும், கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து சூரி தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

தற்போது சூரியின் நடிப்பில் மாமன் திரைப்படம் உருவாகியுள்ளது. அக்கா மகனுக்கும், சூரியனுக்கும் இடையேயான பாச பிணைப்பை உணர்ச்சிபூர்வமாக எடுத்துக் கூறும் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.

மாமன் திரைப்படத்தை பிரசாந்த் பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் விலங்கு வெப் சீரிஸ் மூலம் பிரபலமானவர். வருகிற 16-ஆம் தேதி மாமன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. சற்று முன் மாமன் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகியுள்ளது.