
உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ் கன்ச் பகுதியில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் ஓட்டுனர் கூகுள் மேப் காட்டிய வழியை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தில் இருந்து கார் கீழே கவிழ்ந்து செங்குத்தாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக விபத்தில் ஓட்டுநருக்கு காயம் ஏற்படவில்லை. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.