
தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்திலும் சுதா கொங்கரா இயக்கத்திலும் திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நேர்காணல் ஒன்றில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி பகிர்ந்து உள்ளார். அப்போது பேசிய அவர் “என்னைப் போன்ற ஒரு சாமானியன் திரைத்துறைக்கு வந்து சாதிப்பது ஒரு தரப்பினருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் சிலர் இப்படி ஒருவன் திரை உலகிற்கு வருவதை விரும்பவில்லை.
“நீ எதற்காக வந்தாய்? நீ யார்? உனக்கு என்ன இங்கு வேலை?” என்று முகத்திற்கு நேராகவே கேள்வி கேட்டுள்ளனர். அவற்றையெல்லாம் கடந்து தான் இங்கு வந்துள்ளேன். அனைவர் கூறுவதையும் கேட்டு சிரித்து விட்டு நகர்ந்து விடுவேன்.
அதேபோன்று நான் நடித்த படம் வெற்றி பெற்றால் மற்றொருவரை பாராட்டுவார்கள், அதேநேரம் தோல்வியடைந்தால் என்னை காரணம் கூறுவார்கள்” எனக் கூறியுள்ளார்.