தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் கடந்த மாதம் முதல் மாநாட்டினை பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார். இந்த மாநாட்டில் தமிழ்நாடு மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நடிகர் விஜய் தன்னுடைய கொள்கை மற்றும் கொள்கை தலைவர்களை அறிவித்த நிலையில் திமுகவை நேரடியாக அரசியல் எதிரி என்று அறிவித்த அவர் பாஜகவை கூட மறைமுகமாக விமர்சித்தார்.

நடிகர் விஜயின் கொள்கைகள் கிட்டத்தட்ட திமுக கட்சியின் கொள்கைகளோடு ஒத்து போவதாக பலரும் கூறுகிறார்கள். ஏனெனில் திராவிடமும் தேசியமும் இரு கண்கள் என்று விஜய் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது திமுகவில் உதய சூரியன் சின்னத்திற்கு போட்டியாக ஒரு சின்னத்தை தமிழக வெற்றி கழகத்தினர் வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அந்தச் சின்னம் தொடர்பான போட்டோ கூட வெளிவந்துள்ளது. அதன்படி கட்சி கொடியின் நிறத்தில் சூரியனின் மஞ்சள் நிறத்தோடு இரு கைகள் உள்ளவாறு நடுவில் வரைபடத்தோடு அந்த அந்த முத்திரை இருக்கிறது. மேலும் உதயசூரியன் சின்னத்திற்கு போட்டியாக விஜய் புதிய சின்னத்தை களம் இறக்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.