மனித மூக்கு சுமார் ஒரு மில்லியன் வெவ்வேறு வாசனைகளை கண்டறியும் திறன் கொண்டது. ஆனால் அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் உணர்வது மனிதர்களால் இயலாத ஒன்று. எனவே இஸ்ரேலில் உள்ள Ben Gurion பல்கலைக்கழகம் AI தொழில்நுட்ப உதவியுடன் Sensify என்ற மின்னணு மூக்கை உருவாக்கியுள்ளது. இதற்கு இ -மூக்கு என பெயரிடப்பட்டுள்ள நிலையில் இந்த மூக்கு குறிப்பாக உணவில் உள்ள விஷத்தை முகரும் திறன் கொண்டது. இந்த மூக்கு உணவு பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.