
RCB அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இன்று அவர் தனது பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் ஓய்வு தொடர்பாக மனம் திறந்து உள்ளார்.
அதில், இன்னும் மூன்று ஆண்டுகள் விளையாடுவதற்கு உடல் தகுதியுடன் தான் இருக்கிறேன், ஆனால் மனதளவிலான நிலையே ஓய்வு முடிவை எடுக்க வைத்தது. என் வாழ்க்கையில் எனக்கு அதிக பிரச்சனைகள் இல்லை. நான் எதை செய்ய விரும்புகிறேனோ, அதை 100% அர்ப்பணிப்புடன் கொடுக்க முயற்சிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.