நத்திங் போன் 1 அறிமுகமாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் கேமராவின் தரம் போன்ற வழக்கமான சிக்கல்களை சந்தித்தது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக நத்திங் போன் 2 அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஃபிளிப்கார்ட் விற்பனை தளத்தில் ‘நத்திங் போன் 2’ மாடலின் 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்டுக்கு 10% தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

அதாவது ரூ.49,999 என்ற விலை கொண்ட இந்த போனை ரூ.44,999க்கு வாங்க முடியும். மொத்தமாக ரூ.5,000 விலை குறைகிறது. இது தவிர ஐசிஐசிஐ, கோடக் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி கார்டுகளுக்கு ரூ.3,000 கேஷ்பேக்கும் உண்டு.