நாடு முழுவதும் சிறார் பாலியல் துன்புறுத்தல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து எக்ஸ், யூடியூப் மற்றும் டெலிகிராமுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது அந்த தளங்களில் இருக்கும் எந்த ஒரு சிறார் பாலியல் துன்புறுத்தல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உடனடியாகவும், நிரந்தரமாகவும் நீக்க அல்லது முடக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளது.

வரும் காலத்தில் இது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பரவலை தடுப்பதற்கு தீர்வு நடவடிக்கைகள் எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. இதனை இந்த தளங்கள் விரைந்து செய்ய தவறும் பட்சத்தில் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு 79 கீழ் அந்த தளங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட பாதுகாப்பு திரும்ப பெறப்படும். இதன் மூலம் சிறார் பாலியல் துன்புறுத்தல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அந்த தளங்களால் பதிவேற்ற படாவிட்டாலும் அவற்றின் மீது நேரடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.