உஸ்பெகிஸ்தானில் உள்ள பார்க்கெண்ட் பகுதியில் ஒரு தனியார் மிருகக்காட்சி சாலை அமைந்துள்ளது. இங்கு 4 சிங்கங்களை ஒரு கூண்டுக்குள் அடைத்து வைத்துள்ளனர். கடந்த 17ஆம் தேதி விலங்கு காப்பாளர் ஒருவர் இந்த சிங்கங்களின் கூண்டுக்கு அருகே சென்றார். அவர் தன்னுடைய காதலியை இம்ப்ரஸ் செய்ய ஆசைப்பட்டார்.

அதற்காக அவர் சிங்கத்தின் கூண்டுக்குள் நுழைந்தார். அப்போது மூன்று சிங்கங்களும் அவரை கடித்து குதறியது. அந்த நபர் அமைதியாக நுழைந்தபோது முதலில் அந்த சிங்கங்களை கொஞ்ச ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவைகள் கடித்து குதறியது. மேலும் இந்த சம்பவத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.