EPFO ஆணையம் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் தற்போது வட்டி தொகையை செலுத்த தொடங்கியுள்ள நிலையில் கணக்கில் உள்ள இருப்பு அதிகரிக்கும். இதனால் அனைத்து கணக்குகளிலும் வட்டி தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது ஊழியர்கள் உறுதி செய்வது அவசியம். இதனை எளிதில் அறிந்து கொள்வதற்கான நான்கு முறைகள் குறித்து இதில் பார்க்கலாம்.

முதலில் எஸ் எம் எஸ் மூலமாக வீட்டிலிருந்து பிஎப் கணக்கில் உள்ள தொகையை நீங்கள் சரி பார்க்கலாம். அதற்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 க்கு ‘EPFOPHO UAN LAN’ ஐ அனுப்ப வேண்டும்.

அடுத்ததாக மிஸ்டு கால் மூலம் pf கணக்கில் உள்ள தொகையை அறிய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.

இணையதளம் மூலமாக பிஎப் கணக்கில் உள்ள தொகையை அறிந்து கொள்ள epfindia.gov.in  என்ற இணையதள பக்கத்தில் பிஎப் இருப்பை சரி பார்க்கலாம்.

UMANG பயன்பாட்டின் மூலமாக இந்த சேவையை பெறுவதற்கு EPFO க்கு சென்று பணியாளர் மைய சேவைகள் என்பதை கிளிக் செய்து ஒருவர் பாஸ்புக்கை காண்க என்பதை தேர்ந்தெடுத்து பாஸ்புக்கை பார்க்க UAN நம்பரை உள்ளிட்டு உள் நுழைந்து பிஎப் இருப்பை சரி பார்க்கலாம்.