பொதுவாகவே அனைவரது வீடுகளிலும் பல்லி தொல்லை அதிகமாக இருக்கும். வீட்டில் அனைத்து அறைகளிலும் சுவர்களின் மீதும் உருண்டு கொண்டு இருக்கும் பல்லியை பார்ப்பதற்கு சிலர் பயப்படுவார்கள். வீட்டில் நாம் பயன்படுத்தக்கூடிய சில பொருட்களை வைத்து அதனை வீட்டு பக்கமே வராதபடி நாம் செய்துவிடலாம். பல்லியை கொல்லாமல் எப்படி வீட்டில் இருந்து வெளியேற்றுவது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

அந்துருண்டை பூச்சிகளை விரட்டும் அதிக தன்மை கொண்டதால் அதனை அடுப்புக்கு அடியில் அல்லது வீட்டின் மூலையில் அல்லது அலமாரியில் வைத்து விட்டால் பல்லி தொல்லை இருக்காது.

பூண்டு பற்களை சுவரில் தொங்க விடுவது அல்லது பல்லிகள் அதிகம் உள்ள இடத்தில் பூண்டு வைப்பது அதனை விரட்டி அடிக்க உதவும்.

முட்டை ஓடுகளில் இருந்து வரும் வாசனையை பல்லி அதிகம் விரும்பாததால் வீட்டில் அடிக்கடி பல்லி வரும் இடங்களில் காலியான முட்டை ஓடுகளை வைத்து விட்டால் பல்லிகள் வராது.

மயில் இறகுக்கு பல்லிகள் பயப்படுவதாக ஆய்வுகள் கூறும் இடையில் மயிலிறகுகளை பல்லிகள் அதிகம் இருக்கும் இடத்தில் வைத்துவிட்டால் பல்லிகள் அந்த பக்கம் வராது.

அடுத்ததாக புகையிலை படியுடன் காப்பித்தூளை கலந்து சிறு உருண்டையாக செய்து பல்லி அதிகம் உள்ள இடங்களில் வைத்து விட்டால் அவற்றின் நடமாட்டம் குறைந்து விடும்.