பொதுவாகவே அனைவரது வீட்டிலும் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாகவே இருக்கும். அதனை அழிக்க சந்தையில் ஏராளமான ரசாயனம் கலந்த மருந்து பொருட்கள் உள்ளன. ஆனால் அதனை வீடுகளில் பயன்படுத்துவது குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். இது போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் தெரியாமல் குழந்தைகளின் வயிற்றில் சென்றால் பெரிய ஆபத்து ஏற்படும். வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகரித்தால் அதிகம் செலவு செய்து மருந்துகளை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதில் கரப்பான் பூச்சியை இயற்கை முறையில் விரட்டியடிக்கலாம்.

கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்கு பலாப்பழ இலையை பொடியாக செய்து பயன்படுத்துவது சிறந்த தீர்வு. இந்த இலையை நன்றாக அரைத்து அந்த பொடியை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தூவினால் கரப்பான் பூச்சி வராது.

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் மண்ணெண்ணையை நிரப்பி கரப்பான் பூச்சிகள் அதிகம் காணப்படும் இடங்களில் தெளித்தால் வெறும் 30 நிமிடத்தில் கரப்பான் பூச்சியை விரட்டி அடிக்கலாம்.

ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை கிளாஸ் பெப்பர்மென்ட் எண்ணையை கலந்து அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி வீட்டில் பயன்படுத்தினால் கரப்பான் பூச்சிகள் வீட்டு பக்கம் வராது.

ஒரு கிளாஸ் தண்ணீரில் பேக்கிங் சோடாவை நன்கு கலந்து அதில் சிறிது சர்க்கரை சேர்த்து இந்த கலவையை கரப்பான் பூச்சிகள் அதிகம் வரும் இடங்களில் தெளித்தால் இந்த வாசனை கரப்பான் பூச்சிகளை விரட்டி அடிக்கும்.