பெரும்பாலும் மக்கள் நீண்டு தூர பயணத்திற்கு ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ஏனெனில் விமானம், பேருந்து பயணங்களை விட ரயில் பயணம் குறைந்த கட்டணம் மற்றும் சவுகரியமாக செல்லலாம் என்ற காரணம் தான். இதற்கிடையில் ரயில் குறித்து ஏராளமான விஷயங்கள் நமக்கு தெரிவதில்லை. அந்தவகையில் ரயில் பெட்டிகள் பெரும்பாலும் நீலம், சிவப்பு, பச்சை நிறத்தில் இருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் அந்த ரயில் பெட்டிகள் நிறங்களுக்கு ஒரு காரணம் உண்டு.

பச்சை நிற ரயில்கள், பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க வடிவமைக்கப்பட்டது. அதே போல சிவப்பு நிற ரயில்கள் அலுமினியத்தால் ஆனது. இந்த சிவப்பு ரயில் பெட்டிகளின் எடை குறைவு. மேலும் இதில் வேகம் அதிகம். இரும்பினால் செய்யப்பட்ட, அதிக எடை கொண்ட நீல நிற எக்ஸ்பிரஸ், மணிக்கு 70 – 140 கிமீ வேகத்தில் மட்டுமே செல்லும்.