
இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த கொடூரமான மருத்துவர் வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவத்திற்குப் எதிராக இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், மக்களே பெண்களை பாதுகாக்க வேண்டியது மட்டுமல்ல, வீட்டிலுள்ள ஆண்களிடம் எவ்வாறு பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதையும் கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவர் தமது சமூக வலைத்தளத்தில், வீட்டில் உள்ள மகன், தந்தை, கணவன், அண்ணன், தம்பி என உங்கள் வீட்டு ஆண்கள் அனைவரும் பெண்களை எப்படி மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதை சொல்லிக் கொடுங்கள் என தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

இதற்கு முன்பாக மொஹம்மது சிராஜ், ஷமி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.