
சென்னையில் உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் 21 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இதில் அந்த வாலிபர் பெயிண்டர் ஆக வேலை பார்க்கும் நிலையில் அவர் தினந்தோறும் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில் திருமணமான நாளிலிருந்து அந்த வாலிபரின் தந்தையான சரவணன் என்பவருக்கு தன் மருமகள் மீது தவறான கண்ணோட்டம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் தன் மருமகள் பேர குழந்தையுடன் தனியாக இருப்பதை சரவணன் அறிந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் ஆசிட் மற்றும் பிளேடு ஆகியவற்றுடன் வீட்டிற்குள் நுழைந்து கதவை உள்பக்கமாக கூட்டிக்கொண்டார். பின்னர் தன் மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். ஆனால் அவரிடமிருந்து தப்ப இளம் பெண் முயன்ற நிலையில் ஆசிட்டை ஊற்றி விடுவதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் இந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி விட்டு அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கோயம்பேடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சரவணன் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.