நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகைகள் 9 நாட்கள் சிறப்பாக நடந்து முடிந்தது. அந்த வகையில் பெங்களூருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தசரா பண்டிகையை முன்னிட்டு நவராத்திரி கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போதே துர்கா தேவிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். அப்போது பூஜையில் கலந்து கொண்ட ஐடி ஊழியர் ஒருவர் ஒரு கையில் செல்போன் மற்றும் மற்றொரு கையில் லேப்டாப் வைத்தபடி வேலை பார்த்துக்கொண்டே சாமி தரிசனம் செய்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என்று பலரும் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் எந்த ஒரு வேலையை செய்தாலும் அதில் முழுமையாகவும் முழு மனதுடன் செய்ய வேண்டும் என்று பலரும் அறிவுரை வழங்கி வருகிறார்கள். மேலும் இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.