இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. உங்கள் ஆதார் அட்டை தொலைந்து விட்டால் அதை இரண்டு வழிகளில் மீட்டெடுக்க முடியும் UIDAI இன் https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று ஆதார் அல்லது EID என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதன் பிறகு ஆதார் கார்டில் உள்ளபடி உங்களுடைய பெயர், மொபைல் நம்பர் மற்றும் மெயில் ஐடி ஆகியவற்றை என்டர் செய்து sent OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும். ஓடிபி என்டர் செய்த பிறகு எஸ்எம்எஸ் மூலமாக உங்களுடைய ஆதார் நம்பர் உங்களுக்கு அனுப்பப்படும். உங்கள் தொலைபேசி எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால் நீங்கள் ஆதார் பதிவு மையத்திற்கு சென்று ஆதார் கார்டை பெற்றுக் கொள்ளலாம்.