உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டம் கோவிந்த்புரா பகுதியில் சோகமான சம்பவம் ஒன்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. உளவுத்துறைப் பிரிவில் பணியாற்றி வந்த அவினாஷ் மற்றும் அவரது தங்கை அஞ்சலி ஆகியோர் தங்களுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைக்கு முன், அஞ்சலி எழுதி வைத்த 22 பக்கத் தற்கொலைக் குறிப்பில், தனது வளர்ப்புத் தாய் ரிது மற்றும் தந்தை சுக்பீர் சிங் தான் தன்னுடைய மற்றும் தம்பியின் தற்கொலைக்கு காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

“சமூக பார்வைக்கும், வெறும் பெருமைக்கும் அப்பா என் வாழ்கையை அழித்தார்” என்று குறிப்பில் அஞ்சலி தெரிவித்துள்ளார்.

அவருடைய வார்த்தைகளில், “ஒரு தந்தையின் கடமை பிள்ளையை பள்ளிக்குக் கொண்டு போவது மட்டுமல்ல, மனதோடு கூட இருப்பதும் அவசியம்” என்றும் அவர் எழுதியுள்ளார்.

“சுக்பீர் சிங், உங்களை ‘அப்பா’ என்று அழைப்பது எனக்கு மிகவும் சுயமரியாதைக்கே தீங்கு” என்றும், “நான் இறந்த பிறகு என் உடலைத் தொட கூட உங்களுக்கு உரிமை இல்லை. என் சிதையை என் நண்பர் மஹிம் மட்டுமே எரிக்க வேண்டும்” என்றும் அவர் தனது கடைசி விருப்பங்களை குறிப்பிட்டுள்ளார்.

அதிலும் முக்கியமாக, “என் தங்கை நடத்தை குறித்த கேள்விகள் எழுப்பப்படக்கூடாது என்பதற்காகவே நாங்கள் இருவரும் முடிவெடுத்தோம். நாங்கள் தனியாக இருந்திருந்தால், சமூகப் பழிவாங்கலால் இன்னும் மோசமாக பேசப்பட்டிருக்கும்” என அவளின் தாயாரின் நடவடிக்கைகள், தந்தையின் மௌனம் ஆகியவை மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளன என்பதை ஆழமாக வெளிப்படுத்தியுள்ளார்.

அஞ்சலி தனது மாற்றாந்தாய் ரிதுவை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் புத்திசாலித்தனமாக தனது தந்தையை கட்டுப்படுத்துவதாகவும், பல வருடங்களாக அவளிடம் ஏற்பட்ட வலியை தாங்க முடியாமல் தான் இம்முயற்சிக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

இவ்வாறு தந்தை மற்றும் மாற்றாந்தாய் ஆகியோரால் மனதளவில் துன்புறுத்தப்பட்ட சகோதரர், சகோதரி இருவரும் தங்கள் வாழ்நாளை முடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது இந்த தற்கொலைக் குறிப்பின் மூலம் வெளிவருகிறது.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களது  விருப்பம், சொத்து உரிமை உள்ளிட்ட விவரங்களைப் பொறுத்து மேலதிக விசாரணை நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.