
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். தற்போது அவருடைய கட்சியில் மாவட்ட செயலாளர்கள் உட்பட நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செல்கிறார். நடிகர் விஜய் ஏற்கனவே பரந்தூர் சென்று முதல் அரசியல் கள பயணத்தை தொடங்கிய நிலையில் அடுத்ததாக தமிழ்நாடு முழுவதும் செல்ல இருக்கிறார்.
2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நடிகர் விஜயின் அரசியல் வருகை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை என்பது நடைபெற்று வரவில்லை நடிகர்கள் பலரும் அவருடைய கட்சியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் பிரபல நடிகர் மற்றும் பிக் பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகன் விஜய் டிவியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது ஒருவரிடம் வெள்ளை வேட்டி சட்டை கட்டிக்கொண்டு எங்களுடைய கட்சியின் இணைந்து கொள்கிறீர்களா எங்களுடைய கட்சி தமிழக வெற்றி கழகம் என்று கூறுகிறார். அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேரடியாக விஜய் கட்சிக்கு வருமாறு அவர் நகைச்சுவையாக அழைத்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram