போலியான அழைப்புகள் பற்றி சமீபத்தில் புகார் வருவதாக கூறி தொலைத்தொடர்பு துறை பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலர் தொலைத்தொடர்பு துறையினர் பேசுகிறோம் என்று கூறி மக்களுக்கு வாட்ஸ்அப் எண் மூலமாக அல்லது செல்போன் வழியாக அழைக்கின்றனர். அவ்வாறு அழைப்பதுடன் உங்கள் எண் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

எனவே அது துண்டிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள். மேலும் நிதி மோசடி மற்றும் காதல் உள்ளிட்ட பல மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இது போன்ற அழைப்பு வந்தால் உங்கள் விவரங்களை அளிக்க வேண்டாம் என்று தொலைத்தொடர்பு துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ஹெல்ப்லைன் எண் 1930 அல்லது www.cybercrime.gov.in  என்ற இணையதள முகவரியிலும் புகார் அளிக்கலாம்.