இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மக்கள் பணத்தை எளிதாக கையாண்டு வருகிறார்கள். மக்களின் பணிகளை டிஜிட்டல் யுகம் எளிதாக்கிவிட்டது. மேலும் பணம் இல்லாவிட்டால் கிரெடிட் கார்டு மூலமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்வது முதல் மொபைல் மூலமாக ஆர்டர் செய்து போன்ற அனைத்து வசதிகளுமே வந்துவிட்டது. ஆன்லைன் ஷாப்பிங்க்  வசதி இல்லாதவர்கள் ஏடிஎம் டெபிட் கார்டு பயன்படுத்தி தங்களுக்கான தேவையை செய்து வருகிறார்கள். இந்த ஏடிஎம் கார்டுகள் பணம் எடுப்பதற்கு, பணம் டெபாசிட் செய்வதற்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள் .ஆனால் இதில் பல்வேறு பயன்கள் இருப்பது பலருக்கும் தெரியவில்லை.

அதாவது டெபிட் கார்டில் ஷாப்பிங் அல்லது பணம் எடுக்கும் வசதி உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் டெபிட் கார்டு மூலமாக இலவச காப்பீடு கிடைக்கும் என்பது தெரியுமா? ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டதும் விபத்து காப்பீடு அல்லது ஆயுள் காப்பீடு வசதியும் கிடைக்கிறது. ஆனால் இந்த காப்பீடு உங்களிடம் உள்ள டெபிட் கார்டை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒருவர் ஏடிஎம் கிளாசிக் கார்டு பயன்படுத்தினால் ஒரு லட்சம் இன்சூரன்ஸ் கிடைக்கும். பிளாட்டினம் ஏடிஎம் கார்டு பயன்படுத்தினால் இரண்டு லட்சம் இன்சூரன்ஸ்  கிடைக்கும்.

விசா கார்டு பயன்படுத்தினால் 1.5 முதல் 2 லட்சம் வரை காப்பீடு தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஏடிஎம் கார்டுகளை 45 நாட்களுக்கு ஒரு முறையாவது பயன்படுத்தாவிட்டால் காப்பீட்டு வசதி பொருந்தாது என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த  பயன்கள் குறித்து அறிந்து கொள்ள சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு ஆர்பிஐ வங்கி அறிவித்துள்ளது.