உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிதி உதவிகளையும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன.

அதேபோன்று இந்திய அரசு உக்ரைன் மக்களை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றது. இதுவரை 14 தொகுதிகளாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 15 வது தொகுதி நிவாரண உதவியாக 30 ஜெனரேட்டர்களை இந்திய அரசு உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. இந்திய தூதர் ஹர்ஷ் குமார் இந்தியா தரப்பில் உக்ரைனுக்கு இந்த தொகுப்பினை வழங்கினார். உதவிக்கு நன்றி தெரிவித்த உக்ரைன் தூதரகம் இந்தியா வழங்கிய ஜெனரேட்டர்கள் கல்வி நிலையங்களில் நிறுவப்படும் என்று கூறியுள்ளது.