ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் களப்பணிகள் குறித்து மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை சந்தித்து கலந்தாலோசனை மேற்கொண்டு வருகிறார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய சந்தித்து சீமான், ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளரை நியமிக்கும் பொதுக்கூட்டம் 29-ஆம் தேதி நடைபெறும்.

இந்த இடைத்தேர்தலில் நான் போட்டியிட போவது கிடையாது. அந்த தொகுதியில் ஒரு பெண் வேட்பாளரை தான் நியமிக்க இருக்கிறோம். பிற கட்சிகள் எத்தனை கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம். நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம் என்று கூறினார். அதன் பிறகு எல்லா கட்சிகளும் ஆதரவு கொடுத்தாலும் பாஜகவால் கண்டிப்பாக தேர்தலில் வெல்ல முடியாது. மக்கள் மாற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் எதிர்க்கட்சி ஆளும் கட்சி என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள் என்றும் கூறினார்.