பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து முடிவு செய்ய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த கூட்டத்தில் பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பா.ஜ.க மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல ஆலோசனையில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியிட இதுவரை இ.வி.கே.எஸ் இளங்கோவன் எஸ்.ஆனந்த், மேனகா நவநீதன், ஏ.எம்.சிவ பிரசாத் போன்ற வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. வருகிற பிப்ரவரி 7-ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் கான கடைசி நாளாகும். அதனை தொடர்ந்து பிப்ரவரி எட்டாம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற பிப்ரவரி 10-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இதனை தொடர்ந்து பிப்ரவரி 27-ஆம் தேதி வாக்குப்பதிவு மார்ச் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.