ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் இ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுகின்றார். அதிமுக சார்பாக தென்னரசு மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் என மொத்தம் 77 பேர் தேர்தலில் களம் இறங்குகின்றனர். வாக்கு எண்ணிக்கை வருகின்ற மார்ச் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் 12 அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆதார் அட்டை, ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பணியாட்டை, வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ் பாஸ்புக், தொழிற்சங்க மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பான் அடையாள அட்டை,மக்கள் தொகை பதிவேட்டிற்காக வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு என ஏதாவது ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.