ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி அதாவது நாளை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் 77 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும் 52 வாக்குப்பதிவு மையமும் 238 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி, இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போட வாய்ப்பே இல்லை. வீடு வீடாக சரி பார்த்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக உறுதி கூறினார். அதோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் 10 பறக்கும் படை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்