காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது. தற்போது பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் அரசியல் கட்சியினர் குவிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கும் நபர்கள் தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர். விண்ணப்பங்களை வருகின்ற பிப்ரவரி நான்காம் தேதிக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.