இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு இ சிகரெட்டுக்கு தடை சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு, அதன் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை மற்றும் விளம்பரம் ஆகியவற்றிற்கும் தடை விதித்தது. இருந்தாலும் இ-சிகரெட் தொடர்ந்து புழக்கத்தில் இருப்பதால் தடையை உறுதியுடன் அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. மேலும் ஒரு இ-சிகரெட் வைத்திருந்தாலும் அதுவும் குற்றம் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளது.