நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கே.ஒய்சி ரேஷன் கார்டுகளுக்கு வழங்குவது குறித்து பரவி வரும் பொய்யான தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து குடிமை பொருள் வழங்கல் துறை மத்திய அரசு அனைத்து அரசு ஆவணங்களுக்கும் kyc சரிபார்ப்பை கட்டாயப்படுத்தியுள்ளது. அதன் காரணமாக ரேஷன் கார்டுகளுக்கும் கேஒய்சி அவசியமாக உள்ள நிலையில் ரேஷன் கார்டுகளுக்கு கேஒய்சி கால அவகாசம் இதுவும் வழங்கப்படவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மத்திய அரசின் அறிவிப்பின் காரணமாக மாநிலத்தில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது. அந்த மாநிலத்தில் ஜனவரி மாதம் வரை கேஒய்சி செயல்முறையை முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக பரவி வரும் பொய்யான செய்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று அரசு தெரிவித்துள்ளது. ரேஷன் கார்டுகளில் இடம் பெற்றுள்ள பலர் பிற நாடுகளிலும் பிற பகுதிகளிலும் உள்ளதால் இதற்கான சிக்கல் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.