நேற்று இஸ்லாமிய பண்டிகையான மொகரத்தை இஸ்லாமியர்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடினார். ஆனால் கர்நாடகா மாநிலம் பெலகவி மாவட்டத்தில் இந்து மதத்தினர் மொகரத்தை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். ஹர்லாபூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்களின் மொகரம் கொண்டாட்டம் குறித்து கூறுகையில், பரீக் எனும் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் அவர்களது கிராமத்தில் இருந்ததாகவும் அவர் அதிக நேரத்தை கடவுளை தொழவே செலவிட்டதாகவும் கூறுகின்றனர்.

மேலும் சில வருடங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டதாகவும் அவருக்கு கிராம மக்களே ஒன்று திரண்டு சமாதி கட்டி அதனை கோவிலாக பாவித்து வருவதாகவும் கூறியுள்ளனர். இந்து மக்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டு பரீக் அவர்களுக்கு சமாதி கட்டப்பட்டுள்ளது. அதனை பராமரிக்கும் பணியையும் அவர்களே மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய பண்டிகை வரும்போது இந்த மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் சமாதி கோயிலில் கொண்டாடுவது வழக்கம்.