இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 21 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இரண்டு தரப்பினர்கள் இடையேயும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை 8000த்திற்கும் அதிகமானோர் பரிகாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மனிதாபிமான போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐநா சபையில் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது.

ஜோர்டான் தாக்கல் செய்த இந்த தீர்மானம் காசாவில் தவித்து வரும் பொது மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி வழங்குவதற்கான அவசர தேவையை வலியுறுத்துகிறது. இந்த தீர்மானத்திற்காக வாக்கெடுத்தபோது 14 நாடுகள் எதிராகவும் 120 நாடுகள் ஆதரவாகவும் வாக்களித்தனர். ஆனால் இந்தியா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட 45 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.