இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நான்கு மாதங்களைக் கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் பலஸ்தீனர்கள் 28,000க்கும் அதிகமானோர் உயிர் இழந்ததாக காசா சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த போரினால் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெற்கு காசாவில் அமைந்துள்ளார் ரபா நகரத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில் எகிப்து எல்லையில் உள்ள ரபா நகரத்தில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அங்கிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பரபா நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் 10 குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. போரில் பொதுமக்கள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றது.