சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் இந்திய அணியானது ஆஸ்திரேலியா அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றள்ளது. இந்திய அணியின் சார்பாக விராட் கோலி சிறப்பாக ஆடி 84 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவியிருந்தார். அவருக்கு தான் ஆட்டநாயகம் விருதும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய விராட் கோலி,” பாகிஸ்தானுக்கு எதிரான சூழலை உணர்ந்து அதற்கு ஏற்ப ஆட வேண்டும் என்பதுதான் என்னுடைய திட்டம்.

நான் எப்போதும் தனிப்பட்ட சாதனைகளின் மீது கவனம் செலுத்துவதில்லை. சதம் அடித்தாலும் அது சிறப்பானது தான். ஆனால் போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது. தனிப்பட்ட சாதனைகளை பற்றி அதிகம் நினைக்காத போதுதான் அவை நிகழும் என்று கூட நினைக்கிறேன். இன்றைக்கு சதம் அடித்திருந்தால் நல்ல விஷயமாகவே இருந்திருக்கும். ஆனாலும் அதைவிட அணியின் வெற்றிதான் எனக்கு முக்கியம்.  சொந்த சாதனைகள் எனக்கு இனி முக்கியமில்லை” என்று பேசி உள்ளார்.