
மத்திய மற்றும் மாநில அரசு பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் மாணவர்களை சேர்க்க பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கான க்யூட் தேர்வு இரண்டு மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட நிலையில் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இந்த நிலையில் நேற்று தற்காலிக விடை குறிப்புகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இந்த தற்காலிக விடை குறிப்புகள் குறித்து தேர்வு எழுதியவர்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருந்தால் ஜூலை 9ஆம் தேதி மாலை 6 மணிக்குள் தெரிவிக்கலாம். அது பாட நிபுணர்கள் அடங்கிய குழு மூலம் பரிசீலிக்கப்படும்.
பிறகு திருத்தப்பட்ட இறுதி விடை குறிப்புகள் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அதனைப் போலவே கியூட் தேர்வு நடத்தப்பட்ட விதம் தொடர்பாக கடந்த 30ஆம் தேதி வரை மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட மனக்குறைகளை ஆய்வு செய்யவும் பணி நடந்துவரும் நிலையில் யாருடைய மனக்குறை நியாயமானது என்று கண்டறியப்படுகின்றதோ அவர்களுக்கு மட்டும் ஜூலை 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதிக்குள் ஏதேனும் ஒரு தேதியில் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேசிய தேர்வு முகமை மறு தேர்வு நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.