
கணவருடன் ஹிமாச்சல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற ஹிந்தி நடிகை வைபவி உபாத்யா (30) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மலைப்பகுதியில் கார் சென்றுகொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் வைபவி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வைபவி கடைசியாக தீபிகா படுகோனேவுடன் இணைந்து ‘சபக்’ என்ற படத்தில் நடத்தியிருந்தார்.