இளநீர் என்றாலே எல்லோருக்குமே பிடிக்கும். இது உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு பல நன்மைகளையும் தருகிறது. இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள், ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது.  இது உடலில் நீச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தாது. இதன் உள்ளே இருக்கும் இந்த நீர் தேங்காயின் எண்டோஸ்பெர்ம் பகுதி. இந்த பகுதிதான் நன்கு வளர்ந்து அதன் பிறகு தேங்காயாக மாறுகிறது.

எண்டோஸ்பெர்ம் அல்லது கருப்பை வளரும் கருவுக்கு ஊட்டச்சத்தை கொடுக்கிறது. தென்னை மரம் தன்னுடைய செல்கள் மூலமாக வேர்களில் இருந்து தண்ணீரை எடுத்து இந்த பகுதிக்கு கொண்டு வருகிறது. இந்த நீரில் எண்டோஸ்பெர்ம் கரைந்து கெட்டியாகும். தாவர வேர்காளால் உறிஞ்சப்படும் நீர் செல்கள் மூலமாக கொண்டு செல்லப்பட்டு காய்களில் நீர் கூறுகளை உருவாக்குகிறது. தேங்காய் முதிர்ச்சி அடையும் பொழுது தான் தண்ணீர் வற்ற தொடங்குகிறது.