மத்திய அரசின் புதிய திட்டப்படி இனிவரும் காலங்களில் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் உடன் இலவச சிகிச்சையும் கிடைக்கும். அனைத்து அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்க ஆயுஷ்மான் அட்டைகள் தயாரிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த வசதி பல மையங்களில் அரசால் தற்போது செய்யப்பட்டு வரும் நிலையில் ரேஷன் கார்டை காட்டி பொது வசதி மையத்தில் ஆயுஷ்மான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஆயுஷ்மான் கார்டு தயாரிக்க யோகி அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு பின்னர் உங்கள் சிகிச்சை பெற நீங்கள் கவலைப்பட வேண்டாம். மேலும் புதிய ஆயுஷ்மான் கார்டுகள் அரசால் தயாரிக்கப்படவில்லை. ஏற்கனவே பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே கார்டு தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே 2023 ஆம் ஆண்டு இறுதி வரை இலவச ரேஷன் வழங்கப்படும் என முன்னதாக மத்திய அரசு அறிவித்தது. பிபிஎல் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இலவச ரேஷன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.