இந்தியாவில் வங்கி கணக்கில் வைத்திருக்கும் பணத்தை எடுக்க ஏராளமான விதிமுறைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக வங்கி கணக்கில் பணம் வைத்திருக்கும் ஒருவர் திடீரென உயிரிழந்து விட்டால் அக்கவுண்டில் இருந்து பணத்தை எடுக்க சில வழிமுறைகள் உள்ளது. அதாவது முதலில் இறந்தவரின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எக்காலத்தில் கொண்டும் ஏடிஎம் அல்லது வங்கியின் மூலம் எடுக்க முடியாது. பணத்தை எடுத்தது குடும்ப உறுப்பினராக இருந்தாலும் அது சட்டப்படி குற்றமாகும்.

எனவே உங்கள் மீது நடவடிக்கை எடுத்த நேரிடும். இதனை தவிர்க்க முதலில் இறந்தவரின் பெயரில் இறப்புச் சான்றிதழை பெற்று அதனை வங்கியில் சமர்ப்பித்து இறந்தவரின் நாமினி பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். ஒரு வேளை பல நாமினிகள் இருந்தால் அனைவரின் ஒப்புதலின்படி ஒரு நாமினிக்கு மட்டுமே பணம் வழங்கப்படும். இந்த வழிமுறையை பின்பற்றி மட்டுமே இறந்தவரின் வங்கி கணக்கில் இருந்து உங்களால் பணத்தை எடுக்க முடியும்.