
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பீமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டக்காமரி பகுதியில் மே 2-ஆம் தேதி ஒரு பெண் கொலை செய்யப்பட்டு எரிக்கபட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகராபுவலசா-விஜயநகரம் சாலையை ஒட்டிய ஃபார்ச்சூன் லேஅவுட் அருகே காணப்பட்ட அந்த சடலம், முற்றிலும் எரிந்த நிலையில் இருந்ததால் முதலில் அடையாளம் காண முடியவில்லை. தகவலறிந்த போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, அந்த பெண் மதுரவாடா பகுதியைச் சேர்ந்த வெங்கடலட்சுமி என அடையாளம் கண்டறிந்தனர்.
வெங்கடலட்சுமி தனது இரண்டு மகன்களுடன் ராஜீவ் கிரிஹா பகுதியில் வசித்து வந்துள்ளார். அவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது வெங்கடலட்சுமி மே 1-ஆம் தேதி இரவு ஒரு ஆணுடன் வெளியே சென்றது தெரியவந்தது.
அந்த நபர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கிராந்தி குமார் என்பது கண்டறியப்பட்டது. இவர் வெங்கலட்சுமியின் வீட்டிற்கு அருகே வசித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
கிராந்தி குமாரின் 2-வது மனைவிக்கு இந்த விவகாரம் தெரிய வந்ததையடுத்து, வீட்டில் ஏற்பட்ட சண்டைகளால் மன உளைச்சலில் இருந்த குமார், வெங்கடலட்சுமியை கொலை செய்ய திட்டமிட்டார்.
மே 1 ஆம் தேதி இரவு இருவரும் சுற்றித்திரிந்த பிறகு, ஃபார்ச்சூன் லேஅவுட் பகுதியில் இரவு தங்கியுள்ளனர். அங்கு வெங்கடலட்சுமி தூங்கிக் கொண்டிருந்த போது, கிராந்தி குமார் அவரது கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து, பின்னர் பெட்ரோல் ஊற்றி முகத்தில் தீவைத்து எரித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான தகவலின் அடிப்படையில் விசாகப்பட்டினம் போலீசார் அதிவேகமாக நடவடிக்கை எடுத்தனர். சுமார் 6 மணி நேரத்தில் வழக்கை தீர்த்து, குற்றவாளியை கைது செய்தனர். தற்போது, இறந்த வெங்கடலட்சுமியின் குடும்பத்தினர், கிராந்தி குமாரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
“இது போன்ற கொடூர சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என வெங்கடலட்சுமியின் தந்தை ஆதிநாராயணன் கேட்டுள்ளார்.